March 31, 2013

'ஆட்டிசம் : சில புரிதல்கள்' எனும் நூல்



'ஆட்டிசம் விழிப்புணர்வு மாதம்' எனப்படுகிறது ஏப்ரல் மாதம். 

நேற்று தி.நகர் தக்கர் பாபா பள்ளியில் ஒரு நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. தோழர் டி.கே.ரங்கராஜன், மரு. தேவகி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

'ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல, குறைபாடுதான்; நம் நாட்டில் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சரியான புள்ளி விவரங்கள் இதுவரை இல்லை' என்ற துவக்க உரையோடு, 'ஆட்டிசம்' எனும் புலனுணர்வு சார்ந்த குறைபாட்டிற்கு உள்ளாகும் குழந்தைகளின் உணர்திறன்கள், அவர்களைப் புரிந்துகொள்வதில் உள்ள சவால்கள், அவர்களது பெற்றோர்களுக்கான சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் என எளிய தமிழில் நண்பர் யெஸ். பாலபாரதி எழுதியுள்ள 'ஆட்டிசம் : சில புரிதல்கள்' எனும் நூல் அது. 

பாரதி புத்தகத்தின் Books for Children வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் விலை ரூ.50 மட்டுமே. 

அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

- யுவபாரதி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் தளத்திலும் படித்திருக்கிறேன்...

புத்தக தகவலுக்கு நன்றி...