November 12, 2012

தருமபுரி : தலித் வீடுகள் மீது தாக்குதல், கொள்ளை, தீவைப்பு - உண்மை அறியும் குழு ஆய்வு




தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் – அண்ணாநகர், நத்தம் காலனி மற்றும் கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களிலுள்ள 300க்கும் மேற்பட்ட தலித்துகளின் வீடுகள் வன்னிய சாதியினரால் சூறையாடப்பட்டு - தீவைத்து எரிக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சென்னை எம்ஐடிஎஸ் பேரா.சி.இலட்சுமணன் மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்ட உண்மை அறியும் குழு நேற்று (10-11-2012) தாக்குதலுக்குள்ளான கிராமங்களுக்குச் சென்று களஆய்வு மேற்கொண்டது. பேரா.சி.இலட்சுமணன், பேரா.கி.பார்த்திபராஜா, எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், ஆதவன் தீட்சண்யா, சுகிர்தராணி, யுவபாரதி், கவின்மலர், விஷ்ணுபுரம் சரவணன், ஜெய்கணேஷ் ஆகியோர் அடங்கிய இக்குழுவில், தருமபுரியைச் சேர்ந்த சில சமூகச் செயற்பாட்டாளர்களும் இடம்பெற்றிருந்தனர். பணம் - நகை - கால்நடைகள் கொள்ளையிடப்பட்டதும், வீடு - வாகனம் - வீட்டுபயோகப் பொருட்கள் எரியூட்டப்பட்டதுமான, மோசமான பாதிப்புகளையும் கொடுமையான அழிவுகளையும் பார்க்கையில், இவ்விழப்பிலிருந்து அம்மக்கள் எளிதில் மீண்டு எழஇயலாத நிலையை உணரமுடிகிறது. அழிபாடுகள் மற்றும் சேத மதிப்பீடுகளையும் இக்குழு சேகரித்தது. இவ்வன்கொடுமை குறித்து விரிவானஅறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்து இது குறித்து மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. குழுவின் அறிக்கையை வருகிற வெள்ளிக்கிழமை சென்னையில் வெளியிட (Press Release) உத்தேசிக்கப்பட்டுள்ளது.




புகைப்படங்கள் : யுவபாரதி 

No comments: